கிணற்றில் வீழ்ந்து 5 வயதுச் சிறுவன் சாவு – வட்டுக்கோட்டையில் சம்பவம்

0

வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் தவறுதலாக கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

வட்டுக்கோட்டை அராலி கிழக்கில் நேற்றுமாலை  இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது .

குகதீசன் நிருஜன் (வயது 5) என்ற சிறுவனே உயிரிழந்தார் என்று வட்டுக்கோட்டை  பொலிஸார் தெரிவித்தனர்.

இறப்பு விசாரணையினை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.