இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN 1155

சமூகசேவையைப் பாராட்டி லைகா சுபாஸ்கரனுக்கு கௌரவ கலாநிதிப் பட்டம்

0

லைக்கா குழுமத்தின் தலைவர் சுபாஸ்கரன் அல்லிராஜாவிற்கு மலேசிய பல்கலைக்கழகம் கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கியுள்ளது.

இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் லைக்கா குழுமத்தின் தலைவர் சுபாஸ்கரன் அல்லிராஜா. லைக்கா மொபைல் நிறுவனம், ஐரோப்பாவில் இயங்கும் பல தொலைபேசி நிறுவனங்களில் முதல் இடத்தை எட்டியுள்ளது.

இலங்கையின் வடக்கு – கிழக்கு பகுதில் உள்ள தமிழர்களுக்கு வீட்டுத்திட்டம், ஆபிரிக்க நாடுகளில் உள்ள சிறுவர்களுக்கு உதவி, விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்கள், குடிதண்ணீர் தட்டுப்பாடு உள்ள நாடுகளில் அதற்கான வசதிகளை செய்து கொடுப்பது என சுபாஷ்கரன், மனிதகுல மேம்பாட்டிற்காக பல தொண்டுகளை ஆற்றிவருகிறார்.

இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN1156

இந்நிலையில் மலேசிய ஏம்ய்ஸ்ட் பல்கலைக்கழகம் கடந்த வாரம் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் சுபாஷ்கரனின் சமூக சேவையைப் பாராட்டி, கௌரவ கலாநிதிப் பட்டத்தை வழங்கியுள்ளது.

லைக்கா நிறுவனம் இந்திய சினிமாவிலும் பல பிரமாண்ட படங்களைத் தயாரித்து வருகிறது. ரஜினி நடிப்பில் உருவான 2.0, விரைவில் வெளிவர உள்ள தர்பார் உள்பட பல படங்களை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN236

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here