இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN 1155

தமிழர் ஒருவரைத் தாருங்கள் வடக்கு ஆளுநராக நியமிக்கின்றேன் – அமைச்சரவையில் கோத்தாபய வலியுறுத்து

0

“வடக்கு மாகாண ஆளுநராக தமிழர் ஒருவரை நியமிக்க நான் தயாராக இருக்கிறேன். அமைச்சர்களே சிறந்த ஒருவரை என்னிடம் பரிந்துரை செய்யுங்கள்” என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இன்று மாலை நடந்த அமைச்சரவை கூட்டத்தில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

வடக்கு மாகாண ஆளுநரை நியமிப்பதில் இழுபறி நிலை நீடிக்கிறது. தமது வெற்றிக்கு ஒத்துழைத்தவர்களுக்கு ஏனைய 8 மாகாணங்களுக்கும் நியமித்த ஜனாதிபதி, வடக்கு மாகாண ஆளுநராக தமிழ் ஒருவரை நியமிப்பதில் நீண்ட இழுபறியில் உள்ளார்.

இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN1156

முத்தையா முரளிதரனை நியமிப்பதில் ஜனாதிபதி உறுதியாகவிருந்தார். எனினும் முரளிதரன் ஆளுநர் பதவியை அடியோடு மறுத்துவிட்டார். அதனால் தனது வெற்றிக்கு பங்காற்றிய கலாநிதி ரிஷி செந்தில்ராஜை நியமிக்க திட்டமிட்டார். அவரும் பொதுத் தேர்தலை இலக்கு வைத்து மறுத்துவிட்டார்.

இந்த நிலையில் வானிலை மாற்றம் போன்று ஒவ்வொருவருடைய பெயர்கள் அடிபட்டன. இறுதியில் மூத்த பத்திரிகையாளர்கள் என்.வித்தியாதரன், கே.ரி.ராஜசிங்கம் ஆகியோரின் பெயர்கள் உள்ளன. அத்துடன், கலாநிதி சுரேன் ராகவனை நியமிக்க ஜனாதிபதியுடன் ஒரு தரப்பு போராடிக் கொண்டிருக்கிறது.

இதில் என்.வித்தியாதரன் மகிந்த ராஜபக்சவின் தரப்பால் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளார் என்றும் அறிய முடிகிறது.

இந்த நிலையில் அமைச்சரவையில் இன்று இந்தக் கருத்தை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச முன்வைத்துள்ளார்.

இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN236

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here