பொதுத் தேர்தலை நடத்த ஏப்ரல் 25, 27, 28 திகதிகளை பரிந்துரைத்தது ஆணைக்குழு

0

மார்ச் மாத தொடக்கத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் ஏப்ரல் 25, 27 அல்லது 28 ஆம் திகதிகளில் பொதுத் தேர்தல் நடத்தப்படலாம் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவுக்கும் அரசியல் கட்சிகளின் பொதுச் செயலாளர்களுக்கும் இடையே இன்று புதன்கிழமை இடம்பெற்ற சிறப்புக் கலந்துரையாடலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்தக் கலந்துரையாடலின் போது பொதுத் தேர்தல் மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு கட்சிகளின் நிலைப்பாடுகளைக் கேட்டறிந்தது.

இதேவேளை, நாடாளுமன்றைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மார்ச் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.