மணல், கிரவலை ஏற்றிச் செல்ல அனுமதிப்பத்திரம் ரத்து

0

மணல், கிரவல் உள்ளிட்ட கனிம வளங்களை ஏற்றிச் செல்வதற்கு அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளும் நடைமுறை உடன் நடைமுறைக்கு வரும் வகையில் ரத்துச் செய்யவதாக அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

இன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.

இதன்மூலம் இன்று முதல் யாரும் மணல், கிரவல் உள்ளிட்ட கனிய வளங்களை ஏற்றிச் செல்ல முடியும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மணல் உள்ளிட்ட கனிம வளங்களை ஏற்றிச் செல்வதற்கு அனுமதிப்பத்திரம் எடுக்கவேண்டும் என்ற நடைமுறை தற்போது உள்ளமை குறிப்பிடத்தக்கது.