எமது மகனால் நாட்டுக்குப் பெருமை – சண்முகேஸ்வரனின் பெற்றோர் மகிழ்ச்சி

0

நேபாளத்தில் நடைபெற்றுவரும் தெற்காசிய மெய்வல்லுநர் போட்டிகளில் 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்ற சண்முகேஸ்வரன், சர்வதேச போட்டிகளில் இலங்கை சார்பாக பெற்றுக் கொண்ட இரண்டாவது பதக்கம் இதுவாகும் என்று உறவினர்கள் தெரிவித்தனர்.

யார் இந்த சண்முகேஸ்வரன்

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் இன்று வியாழக்கிழமை சண்முகேஸ்வரன் பற்றிய தகவல்களை அறிந்து கொள்வதற்காக அவரது்சொந்த ஊரான ஹட்டன் வெளிஒயா புதுக்காடு தோட்டத்தில் உள்ள வீட்டிற்கு சென்றிருந்தார்.

அதன் போது வீட்டில்
அவருடைய அம்மா சிவகாமி இவர் நோய்வாய்பட்டு வீட்டோடு இருக்கிறார் தந்தை
முருகையா குமார் தோட்ட தொழிலாளி .

இவர்களுக்கு பிறந்த மூன்றாவது
பிள்ளைதான் சண்முகேஸ்வரன்.

“எமது மகனால் இந்த நாட்டுக்கு வெள்ளி பதக்கத்தை பெற்று கொடுத்தை நினைக்கும் போது எமது சந்தோசமாக இருக்கிறது .

சண்முகேஸ்வரன் சிறுவயதில் இருந்தே விளையாட்டு போட்டியில் ஆர்வமுள்ளவர்.
தனது கல்வியினை ஆக்ரோயா தமிழ் வித்தியாலயத்திலும் தொடர்ந்து குயில்வத்தை தமிழ் வித்தியாலத்திலும் தமது கல்வி நடவடிக்கையினை மேற்கொண்டார்” என்று பெற்றோர் தெரிவித்தனர்.

ஆரம்பகாலத்தில் கொழும்பில் உள்ள வாகனம் பழுது பார்க்கும் நிலையத்தில்
தொழிலை ஆரம்பித்த சண்முகேஸ்வரன் மெது மெதுவாக அவரின் முயற்சியால்
இராணுவத்தில் இணைந்தார் .

“எனது மகன் இந்த நாட்டுக்கு பெருமையினை தேடித் தந்துள்ளார் நாங்கள் கஷ்டமான குடும்பத்தை சேர்ந்தவர்கள். எனவே எமக்கு இந்த மலையக அரசியல்வாதிகள் முதல் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் உதவி காரம் நீட்ட முன்வரவேண்டும்” என சண்முகேஸ்வரனின் பெற்றோர் கோரிக்கை விடுக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here