முக்கிய சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவுக்கு 4 ஆண்டுகள் தடை

0

முக்கிய சர்வதேச விளையாட்டு போட்டிகளில் ரஷ்யா கலந்து கொள்ளவதற்கு 4 ஆண்டுகள் தடை விதித்து உலக ஊக்க மருந்து எதிர்ப்பு அமைப்பு அறிவித்துள்ளது.

2020ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டி மற்றும் கட்டாரில் 2022 ஆம் ஆண்டு நடைபெறும் கால்பந்து உலகக் கிண்ண போட்டியிலும் ரஷ்யாவின் கொடி அணிவகுப்பில் இடம்பெறாது. அந்நாட்டின் தேசிய கீதமும் ஒலிக்காது.

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக ஊக்க மருத்து எதிர்ப்பு அமைப்பின் கூட்டத்தில் ஒரு மனதாக இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

போதைப் பொருள் பயன்படுத்துதலில் எந்த குற்றமும் இழைக்கவில்லை என்று நிரூபித்த வீரர்கள் பொதுவான ஒரு கொடியில் விளையாடலாம்.

2015 ஆம் ஆண்டிலிருந்து தடகள போட்டியில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்த தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ரஷ்யாவிற்கு 21 நாள்கள் உள்ளன.

2014 ஆம் ஆண்டு ரஷ்யாவின் சோசி நகரில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் ரஷ்யா விளையாட விதிக்கப்பட்ட தடைக்கு பிறகு தென் கொரியாவில் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் மொத்தம் 168 ரஷ்ய தடகள வீரர்கள் பொதுவான கொடியின் கீழ் விளையாடினர்.

இருப்பினும் யூரோ 2020 போட்டியில் ரஷ்யா கலந்து கொள்ளலாம். ஐரோப்பிய கால்பந்து சம்மேளனத்தால் நடத்தப்படும் அந்த போட்டிகள் முக்கிய விளையாட்டு போட்டி என்று கருதபடுவதில்லை என்பதால் ரஷ்யா அதில் விளையாட எந்தத் தடையும் இல்லை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.