சகல பல்கலைகளின் பேரவையும் கலைக்கப்படுகிறது! – உறுப்பினர்களுக்கு கடிதம்

0

நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களினதும் பேரவையின் அனைத்து நியமன உறுப்பினர்களையும் பதவி விலகுமாறு கோரப்பட்டுள்ளது.

இந்த வேண்டுதலை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் கடிதம் ஊடாக ஒவ்வொரு உறுப்பினருக்கும் அனுப்பிவைத்துள்ளார்.

இதுதொடர்பில் அனைத்து பல்கலைக்கழகங்களினதும் பேரவைகளுக்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்களுக்கும் இன்று மாலை 4.30 மணியளவில் மிஞ்சல் ஊடாக கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

“பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்கு பங்களித்த தங்களின் சேவைக்கு நன்றி தெரிவிப்பதுடன், பேரவை உறுப்பினர் பதவியிலிருந்து உடன் நடைமுறைக்கு வரும் வகையில் உத்தியோகபூர்வ அறிவிப்பின் ஊடாக பதவி விலகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்” என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் அந்தக் கடிததத்தில் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here