முன்னாள் போராளிகள் 4 பேர் ரிஐடியினரால் கைது – மூதூரில் சம்பவம்

0

திருகோணமலை, மூதூர் பிரதேசத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகள் நால்வர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீள் உருவாக்கத்துக்கு முயற்சித்தனர் என்ற குற்றச்சாட்டில் அவர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூதூர், சம்பூர் பகுதிகளில் நேற்று முன்தினம், இவர்கள் நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டைப்பறிச்சான் தெற்கு, இறால்குழி, மகிழ்ச்சேனை பகுதிகளைச் சேர்ந்த இந்த நால்வரும் புனர்வாழ்வு பெறாத முன்னாள் போராளிகள் என தெரிவிக்கப்படுகிறது.

அரச புலனாய்வு சேவைக்கு கிடைத்த தகவலை அடுத்து கைது செய்யப்பட்ட இவர்களிடம் இருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்களும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்து, ரி-56 துப்பாக்கி ஒன்று, மகசின்கள் இரண்டு, ரவைகள் 61, கிளைமோர் ஒன்று, கைக்குண்டுகள் மூன்று, டெட்டனேற்றர்கள் மூன்று, 9 மி.மீ ரவைகள் 3 1 என்பன கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் நால்வரும், மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத விசாரணைப் பிரிவினால், கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here