ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் அச்சுவேலியில் கைது

0

3 கிராம் நிறையுடைய உயிர்க்கொல்லி போதைப்பொருளான ஹெரோயினை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் அச்சுவேலியில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்ட சிறப்பு குற்றத்தடுப்புப் பொலிஸார் இன்று நண்பகல் நடத்திய சுற்றுக்காவல் நடவடிக்கையின் போது, சந்தேகநபர் கைது செய்யப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.

சுமார் 3 லட்சம் ரூபா பெறுமதியான 3 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

22 வயதுடைய சந்தேகநபர் அச்சுவேலிப் பொலிஸ் நிலையத்தில் யாழ்ப்பாணம் மாவட்ட சிறப்பு குற்றத்தடுப்புப் பொலிஸாரால் முற்படுத்தப்பட்டார். அவர் நாளை மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என்று அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.