பட்டம் ஏற்றி விளையாடிய சிறுவன் கிணற்றில் தவறி வீழ்ந்து சாவு – பருத்தித்துறையில் துயரம்

0

பட்டம் ஏற்றி விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்தார் என்று மந்திகை மருத்துவமனைத் தகவல்கள் தெரிவித்தன.

பருத்தித்துறை இன்பருட்டிப் பகுதியில் இன்று மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அதே இடத்தைச் சேர்ந்த ஜெகன் ஆனந்த் (வயது -17) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.

இன்று மாலை பட்டம் ஏற்றி விளையாடிய சிறுவன் தோட்டக் கிணறில் தவறி வீழ்ந்துள்ளார். அவரை இரவு 7 மணியாகியும் காணவில்லை என உறவினர்கள் தேடியுள்ளனர். இரவு 7.30 மணியளவில் சிறுவனை கிணற்றிலிருந்து சடலமாக மீட்ட உறவினர்கள் மந்திகை வைத்தியசாலையில் ஒப்படைத்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here