முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கைது

0

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

2016ம் ஆண்டு இடம்பெற்ற வாகன விபத்து சம்பவத்தில் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் அவரது சாரதி ஆகியோர் தொடர்புப்பட்டதாக கூறப்படுவது தொடர்பான விசாரணையின் முன்னேற்றத்தை மன்றுக்கு அறிவிக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் நேற்று கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு உத்தரவிட்டது.

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் சட்டத்தரணிகள் தாக்கல் செய்த மனுவின் மீதே இந்த உத்தரவு நேற்று பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் சட்ட மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய, நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.