இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN 1155

மகாஜனக் கல்லூரி பெண்கள் அணி உதைபந்தாட்டத்தில் தேசிய சம்பியன்

0

அகில இலங்கை பாடசாலை அணிகளுக்கு இடையிலான 20 வயது பெண்கள் பிரிவு உதைப்பந்தாட்ட இறுதிப்போட்டியில் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி அணி சம்பியனானது.

இந்தத் தொடரின் இறுதிப் போட்டி இன்று (டிசெம்.19) வியாழக்கிழமை மு.ப. 11 மணிக்கு கொழும்பு சிற்றிலீக் உதைபந்தாட்ட மைதானத்தில் இடம்பெற்றது.

தெல்லிப்பளை மகாஜனா பெண்கள் அணியை எதிர்த்து பராக்கிரமபாகு மத்திய மகாவித்தியாலய பெண் அணி மோதியது.

இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN1156

ஆட்ட நேரமுடிவில் தெல்லிப்பளை மகாஜனா பெண்கள் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று தேசிய சம்பியனானது.

மகாஜானா கல்லூரி அணியின் வெற்றிக் கோலினை தேசிய அணி வீராங்கனை சாணு பெற்றுக்கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN236

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here