தங்கத்தின் விலை வரலாறு காணாத ஏற்றம்

0

இலங்கையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத ஏற்றம் கண்டுள்ளது. 24 கரட் தூய தங்கம் இன்று 74 ஆயிரத்து 200 ரூபாவாக அதிகரித்துள்ளது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை கடந்த மூன்று வாரங்களாக அதிகரித்துச் செல்கிறது. இதன் எதிரொலியாக இலங்கையிலும் தங்கத்தின் விலையில்  மாற்றம் உண்டாகிறது.

ஆபரணத் தங்கத்தின் விலை!

யாழ்ப்பாணத்தில் இன்று (டிசெம்பர் 27) ஒரு பவுண்  (22 கரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 68 ஆயிரம் ரூபாயாக உள்ளது. நேற்றுமுன்தினம் 67 ஆயிரத்து 850  ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

தூய தங்கத்தின் விலை!

24 கரட் தூய தங்கத்தின் விலை யாழ்ப்பாணத்தில் பவுணுக்கு 200 ரூபாய் உயர்ந்துள்ளது. இன்று அதன் விலை 74 ஆயிரத்து 200 ரூபாயாக இருக்கிறது. நேற்றைய தினம் 74 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.