முதல்வன் வாசகர்கள் அனைவருக்கும் இனிய 2020 ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

0

செக்கன்கள் நிமிடங்களாகி, நிமிடங்கள் மணித்தியலங்களாகி, மணித்தியாலங்கள் நாள்களாகி, நாள்கள் வாரங்களாகி, வாரங்கள் மாதங்களாகி, மாதங்கள் வருடங்களாகி நம் வாழ்க்கை உருண்டோடிக் கொண்டிருக்கிறது.

மலர்ந்திருக்கும் இந்த 2020 ஆங்கிலப் புத்தாண்டில் எண்ணியது எண்ணியபடி நிறைவேற வேண்டும் என்று பிரார்த்திப்போம்.

‘முதல்வன்’ இணையத்தள வாசகர்களாகிய உங்கள் அனைவருக்கும் மலர்ந்திருக்கும் இந்த 2020 ஆங்கிலப் புத்தாண்டு நலமும் வளமும் அள்ளி வழங்கவும் எண்ணியதெல்லாம் இனிதே நிறைவேறவும் மனதார வாழ்த்துகிறோம்.

உங்கள் முயற்சியே வாழ்வின் உயர்ச்சி. நீங்கள் நினைத்தது நினைத்தபடி நடந்தாலும் நடக்காவிட்டாலும் உங்கள் முயற்சியை ஒரு போதும் கைவிடாதீர்கள். நீங்கள் முயற்சியைக் கைவிட்டால் வாழ்க்கையும் உங்களைக் கைவிட்டுவிடும். ஆகவே தோல்விகளைக் கண்டு மனம் தளராமல் வெற்றியை நோக்கி நடை போடுங்கள்.

இரண்டு ஆண்டுகள் தொடர்ச்சியாக ‘முதல்வன்’ இணையத்தளத்துக்கு பேராதரவு வழங்கி வரும் உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். நீங்கள் இல்லாமல் நாம் இல்லை. இனி வரும் நாள்களிலும் உங்கள் ஒத்துழைப்பு எமக்குத் தேவை. உங்கள் ஒத்துழைப்பை தொடர்ச்சியாக எமக்கு வழங்குவீர்கள் என நம்புகிறோம்.

இந்த உலகத்தில் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டு எதுவும் இல்லை. பொருளானாலும் உயிரானாலும் விமர்சனங்களுக்கு செவிகொடுத்தே ஆக வேண்டும். அந்த வகையில் நாமும் உங்கள் விமர்சனங்களுக்கு மதிப்பளிக்கக் காத்திருக்கிறோம். எமது இணையத்தள படைப்புகள் குறித்த உங்கள் விமர்சனங்களை எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

மீண்டும் எமது ‘முதல்வன்’ இணையத்தள வாசகர்களாகிய உங்கள் அனைவருக்கும் 2020 ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்வு கொள்கிறோம்!

நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதுமே மண்டியிடுவதில்லை – அப்துல் கலாம்

உங்கள் விமர்சனங்களையும் ஆக்கங்களையும் எதிர்பார்க்கின்றோம்.
jaffna2media@gmail.com.
Viber and whatsapp – 0769199155

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here