மகசின் சிறையில் தடுப்பிலிருந்த அரசியல் கைதி சாவு

0

கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தண்டனைக் கைதியாக தடுத்துவைக்கப்படிருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

சுமார் 26 ஆண்டுகளாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த மட்டபகளப்பைச் சேர்ந்த செ.மகேந்திரன் (வயது- 46) என்ற அரசியல் கைதியே உயிரிழந்தவராவார்.

மட்டக்களப்பில் 600 பொலிஸாரை சுட்டுக்கொலை செய்த குற்றச்சாட்டில் 1993ஆம் ஆண்டு அவரது 19ஆவது வயதில் கைது செய்யப்பட்டார்.

அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட நிலையில் கொழும்பு மேல் நீதிமன்றால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

அரசியல் கைதி மகேந்திரனுக்கு பல நோய்கள் பீடித்திருந்த நிலையில் சிறைச்சாலையில் உரிய மருத்துவமளிக்கப்படாத நிலையில் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

எனினும் அவர் சிகிச்சை பயனின்றி நேற்றிரவெ உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here