நல்லூர் சீரடி சாய் ஆலயத்தில் மதுபானம் படைத்த சர்ச்சை; நிறுவுனரின் கருத்தும் – அதிகாரிகளின் நடவடிக்கையும்

0

ஈழத்து சீரடி சாய் என அழைக்கப்படும் நல்லூர் நாவலர் வீதி மடர்த்தார்பதி சீரடி சாய் மந்திர் ஆலயத்தில் இடம்பெற்ற மடை வைக்கும் நிகழ்வில் மதுபானங்களை படைத்தமை தொடர்பில் பல்வேறு விமர்சனங்களும் எதிர்ப்புக்களும் எழுந்தன.

அதுதொடர்பில் யாழ்ப்பாணம் பிரதேச செயலர் சதாசிவம் சுதர்சன் எடுத்த நடவடிக்கையின் பிரகாரம், இனி ஒருகாலமும் மதுபானங்கள் படைக்கப்படாது என்று எழுத்துமூல உறுதிமொழி வழங்கிய ஆலய ஸ்பாகர் பா.ராகவன், சைவ மகா சபை, இந்து கலாசார திணைக்களம் உள்ளிட்டவை தமது ஆலயத்தை பாதுகாக்க வேண்டும் என்று பிரதேச செயலாளருக்கான கடிதத்தில் கோரியுள்ளார்.

மேலும் தனிப்பட்ட சில நபர்களால் தமக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், பக்தர் ஒருவரால் மதுபானம் கொண்டுவரப்பட்டதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அவர், அதுதொடர்பில் வேதனைப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாவலர் வீதி மடர்த்தார்பதி சீரடி சாய் மந்திர் ஆலயத்தில் கடந்த 26ஆம் திகதி இடம்பெற்ற மடை வைக்கும் நிகழ்வில் மதுபானங்களை படைத்தமை தொடர்பில் பல்வேறு விமர்சனங்களும் எதிர்ப்புக்களும் எழுந்தன.

அகில இலங்கை சைவ மகா சபை கடுமையான கண்டனத்தை வெளியிட்டது.
இந்நிலையில் சமூக ஊடகங்கள் ஊடாக முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள் தொடர்பில், ஆலயத்தை அமைத்து பூஜைகளை நடத்தி வருபவரான பா.ராகவனை முதல்வன் பிரத்தியேகமாக செவ்வி கண்டது.

பாடசாலை ஆசிரியராகக் கடமையாற்றும் அவர், இந்தியாவில் சென்று சீரடி சாய் மந்திருக்கான பூஜைகள் தொடர்பான மந்திரங்களை கற்று வந்து இங்கு ஆலயத்தை அமைத்து நடத்துவதாக எம்மிடம் தெரிவித்தார்.

அத்துடன், இந்தி மொழி கற்று பரீட்சையில் சித்தியடைந்த தான், ஆண்டுதோறும் வட இந்தியாவுக்குச் சென்று சீரடியில் உள்ள சாயி மந்திர் ஆலய வழிபாடுகளில் பங்கேற்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.


“நாவலர் வீதி மடர்த்தார்பதி சீரடி சாய் மந்திர் ஆலயம் இன்னமும் இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்படவில்லை, பதிவை உடனடியாகச் செய்யுமாறு அறங்காவலர் எனத் தெரிவிக்கும் பா.ராகவனுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளோம்.

அத்துடன், தமிழ் பண்பாடுகள், இந்து வழிபாட்டு முறைகளுக்கு புறம்பாகவும் சிறுவர்களுக்கு தீங்கு விளைவிப்பதற்கு ஏதுவாகவும் மதுபானங்கள் உள்ளிட்வைகளை ஆலயத்தில் இருப்பதாக அறிந்தால் கடும் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என கண்டிப்பான பணிப்புரையை ஆலய அறங்காவலருக்கு வழங்கியுள்ளோம்” என்று யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் சதாசிவம் சுதர்சன் தெரிவித்தார்.

அவரது முழுமையான செவ்வி வருமாறு;

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here