ஜெட் வேகத்தில் எகிறும் தங்கத்தின் விலை – இன்றும் ஆயிரம் ரூபாயால் அதிகரித்தது

0

இலங்கையில்  வரலாற்றில் முதன்முறையாக 24 கரட் தூய தங்கத்தின் விலை  77 ஆயிரம் ரூபாயை எட்டியுள்ளது.

ஈராக்கில் அமெரிக்கா நடத்திய ஏவுகணை தாக்குதல் காரணமாக கச்சா எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரத்தில் பவுணுக்கு 2 ஆயிரம் ரூபாய் அதிகரித்துள்ளது.

இலங்கை வரலாற்றில் கடந்த ஆண்டு தங்கத்தின் விலை 74 ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்தது. எனினும் இன்று அதன் விலை 77 ஆயிரம் ரூபாயை எட்டியுள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை!

யாழ்ப்பாணத்தில் இன்று (ஜனவரி 6) ஒரு பவுண்  (22 கரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 70 ஆயிரத்து 600 ரூபாயாக உள்ளது. நேற்றுமுன்தினம் 69 ஆயிரத்து 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

தூய தங்கத்தின் விலை!

24 கரட் தூய தங்கத்தின் விலை  77 ஆயிரம்  ரூபாயாக உள்ளது. நேற்றுமுன்தினம் 76 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.