பெர்பெச்சுவல் நிறுவனத்தின் வணிக நடவடிக்கைகளுக்கான தடை நீடிப்பு

0

பிணைமுறி மோசடி ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பெர்பெச்சுவல் ட்ரெசரீஸ் நிறுவனம் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான இடைக்காலத் தடையை மேலும் 6 மாதங்களுக்கு நீடித்து இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

“பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டம் மற்றும் உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டம் என்பனவற்றின் கீழ் செய்யப்பட்ட ஒழுங்குவிதிகளின் நியதிகளின்படி, இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்டுவரும் புலனாய்வுகளைத் தொடரும் விதத்தில் 2020 சனவரி 05ஆம் திகதி பி.ப. 4.30 மணியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட் (பிரிஎல்) அதன் வியாபாரத்தினைக் கொண்டு நடத்துவதிலிருந்தும் முதனிலை வணிகர் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்துமான இடைநிறுத்தத்தினை மேலும் ஆறுமாத காலப்பகுதிக்கு நீடிப்பதற்கு தீர்மானித்திருக்கிறது” என்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சிக் காலத்தில் பெர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட் நிறுவனத்துக்கான மத்திய வங்கி பிணைமுறி விற்பனையில் 11,145 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைக்கு உள்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here