தங்கத்தின் விலை இன்றும் சடுதியாக உயர்வு – எவ்வளவு தெரியுமா?

0

யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் ஆயிரத்து 200 ரூபாயால் அதிகரித்துள்ளது.

நேற்றுக் காலை 76 ஆயிரத்து 600 ரூபாயாகக் குறைவடைந்த தங்கத்தின் விலை நேற்று பிற்பகல் 77 ஆயிரம் ரூபாயாக மீள உயர்வடைந்தது.

இந்த நிலையில் இன்று (ஜனவரி 8) புதன்கிழமை 24 கரட் தூய தங்கத்தின் விலை 78 ஆயிரத்து 200 ரூபாயாக உச்சமடைந்துள்ளது.

இலங்கை வரலாற்றில் இந்த விலை ஏற்றம் அதிக கூடியதாகும்.

ஈரான் – அமெரிக்கா போர்ப்பதற்றம் காரணமாக உலக அளவில் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. இதனால், தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வைச் சந்தித்து வருகின்றன.

ஆபரணத் தங்கத்தின் விலை!

யாழ்ப்பாணத்தில் இன்று (ஜனவரி 8) ஒரு பவுண்  (22 கரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 71 ஆயிரத்து 700 ரூபாயாக உள்ளது. நேற்று 70 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

தூய தங்கத்தின் விலை!

24 கரட் தூய தங்கத்தின் விலை  78 ஆயிரத்து 200 ரூபாயாக உள்ளது. நேற்று 77 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.