இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN 1155

வலிகாமம் கல்விப் பணிப்பாளருக்கு எதிராக மாகாண கல்வி அமைச்சு முன் போராட்டம்

0

வலிகாமம் கல்வி வலயப் பணிப்பாளரால் செயற்பாடுகளால் பல்வேறு பழிவாங்கல்களுக்கு ஆசிரியர்கள் முகங்கொடுப்பதாகத் தெரிவித்து இன்று ஆசிரியர்கள் கவனவீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் செம்மணியில் அமைத்துள்ள வடக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு முன்பாக இந்தப் போராட்டம் இடம்பெற்றது.

இந்தப் போராட்டத்தில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் உள்பட ஆசிரியர்கள் சிலர் பங்கேற்றனர்.

இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN1156

வலிகாமம் பணிப்பாளரை விசாரணை செய்,மோசடி இடம்மாற்றங்களை உடனடியாக நிறுத்து, கல்வியில் அதிகார முறைகேடுகளை நிறுத்து, வலிகாமம் கல்வி வலயத்தில் ஆசிரியர்களை பழிவாங்காதே, கடைப்பிடி கடைப்பிடி ஸ்தாபன விதிக்கோவையைக் கடைப்பிடி போன்ற கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் தமது தொழிற்சங்கத்தின் ஊடாக எல்லை மீறிச் செயற்படுவதனால் தனது அதிகாரத்தின் ஊடாக அதற்கு இடமளிக்க வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர் மறுப்பதே சங்கத்தின் இந்தப் போராட்டத்துக்கு காரணம் என்று விடயம் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN236

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here