பெற்றோல் தட்டுப்பாடு வடக்கில் இல்லை – ஆளுநர் அறிவிப்பு

0

வடக்கு மாகாணத்தில் எவ்வித எரிபொருள் தட்டுப்பாடும் இல்லையென வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநரின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள செய்திக் குறிப்பிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

வடக்கு மகாணத்தில்உள்ள வாகன சாரதிகள் இன்று காலை முதல் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்ததை அவதானிக்க முடிந்தது.

.

மக்கள் வீண் வததந்திகளை கேள்வியுற்று இவ்வாறு தமது நேரங்களை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காத்திருந்ததை எம்மால் அவதானிக்க முடிந்தது.

எரிபொருளுக்கான தட்டுப்பாடு நிலவுகிறது என்ற செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை. போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளது. மக்கள் வீண் குழப்பம் அடைய வேண்டாம் என்று வடக்கு ஆளுநர் கேட்டுள்ளார் – என்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here