யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை குறைந்தது

0

யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 200 ரூபாயால் அதிகரித்த நிலையில் இன்று அதே அளவால் குறைவடையந்துள்ளது.

இன்று (ஜனவரி 8) புதன்கிழமை 24 கரட் தூய தங்கத்தின் விலை 77 ஆயிரம் ரூபாயாக குறைவடைந்துள்ளது.

ஈரான் – அமெரிக்கா போர்ப்பதற்றம் காரணமாக உலக அளவில் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. இதனால், தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வைச் சந்தித்து வருகிறது.

ஆபரணத் தங்கத்தின் விலை!

யாழ்ப்பாணத்தில் இன்று (ஜனவரி 8) ஒரு பவுண்  (22 கரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 70 ஆயிரத்து 600 ரூபாயாக உள்ளது. நேற்று 71 ஆயிரத்து 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

தூய தங்கத்தின் விலை!

24 கரட் தூய தங்கத்தின் விலை  77 ஆயிரம் ரூபாயாக உள்ளது. நேற்று 78 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனையானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here