முதலாவது அனைத்துலகத் தமிழியல் மாநாடு யாழ்.பல்கலையில் ஆரம்பம்

0

“வரலாற்றுப் போக்கில் தமிழியல் ஆய்வுகள்” எனும் தொனிப்பொருளில்  முதலாவது அனைத்துலகத் தமிழியல் மாநாடு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்றையதினம்  ஆரம்பமானது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தமிழ்த்துறை பிரிவின் ஏற்பாட்டில், தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் ம.இரகுநாதன் தலைமையில் இந்த மாநாடு நடைபெறுகிறது.

இன்றைய நிகழ்வின்  போது ஆய்வரங்க  கட்டுரை வெளியீட்டு தொகுதியை தமிழ்த்துறை தலைவர் ம. இரகுநாதன் வெளியிட்டு வைக்க யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தகுதி வாய்ந்த அதிகாரி பேராசிரியர் க.கந்தசாமி பெற்றுக்கொண்டார்.

நிகழ்வில் முதன்மை விருந்தினராக யாழ்ப்பாணப்  பல்கலைக்கழக  தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியர் க.கந்தசாமி கலந்து கொண்டிருந்த அதேவேளை , யாழ் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் தமிழகத்தில் இருந்து வந்த பேராசிரியர்கள்,  பல்கலைக்கழக மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இரண்டு நாள்கள் நடைபெறும் இந்த மாநாடு நிகழ்வுகள் நாளையும்  நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here