வடக்கு நிலமைகள் பற்றி மதத் தலைவர்களுடன் ஆராய்ந்தார் ஆளுநர்

0

வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ், நல்லை ஆதீன குருமுதல்வர், யாழ்ப்பாணம் நாக விகாரை விகாராதிபதி மற்றும் இஸ்லாமிய மௌவி ஆகியோரை சந்தித்து ஆசிகளைப் பெற்றார்.

இந்தச் சந்திப்புகள் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றன.

வடக்கு மாகாணத்தின் நிலமைகள் தொடர்பில் மதத் தலைவர்களிடம் கேட்டறிந்த ஆளுநர், தன்னால் முன்னெடுக்க எதிர்பார்த்திருக்கும் பணிகளை அவர்களுக்கு எடுத்துரைத்தார்.

வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் கடந்த 2ஆம் திகதி கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயரை நேற்றுமுன்தினம் சந்தித்து ஆசி பெற்றிருந்தார்.

இந்த நிலையில் இந்து, பௌத்த மற்றும் இஸ்லாமிய மதத் தலைவர்களைச் சந்தித்து நேற்று ஆசிகளைப் பெற்றுக்கொண்டார்.