சாவகச்சேரியில் புதைக்கப்பட்டிருந்த ஆட்லெறிகள் வெளிப்பட்டன – குடிதண்ணீர் குழாய் தாக்க வெட்டப்பட்ட குழியில்

0

தென்மராட்சி சாவகச்சேரியில் ஆட்லெறி எறிகணைகள் கண்டறியப்பட்டுள்ளன.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி கேசவன் சயந்தனின் அலுவகத்திற்கு முன்பாக இந்த ஆட்லறி எறிகணைகள் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் கண்டறியப்பட்டுள்ளன.

குடிதண்ணீர் குழாய்கள் பொருத்துவதற்கு நிலத்தை தோண்டிய போது இவ் வெடிபொருள்கள் காணப்பட்டுள்ளன.

இது தொடர்பாக உடனடியாக சாவகசசேரி பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் மேலும் பல வெடிபொருள்கள் இருக்கலாம் என அப்பகுதிக்கு விரைந்த இராணுவத்தினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here