தென்னையிலிருந்து தவறி வீழ்ந்தவர் உயிரிழப்பு – சரசாலையில் சம்பவம்

0

தென்னை மரத்தில் தேங்காய் பறிக்க ஏறிய குடும்பத்தலைவர் தவறி வீழ்ந்து உயிரிழந்தார்.

இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.30  மணியளவில் இடம்பெற்றது.

சாவகச்சேரி சரசாலை தெற்கைச் சேர்ந்த கந்தையா சத்தியசீலன் (வயது -46) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

சடலம் சாவகச்சேரி வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here