யாழ்.மாநகர் நடுவே பௌத்தக் கொடி; நாட்டியவரை அறிந்ததால் அகற்றப்பட்டது

0

யாழ்ப்பாணம் மாநகர மத்தியில் பௌத்த கொடி ஒன்று கட்டப்பட்டு மலர் வைத்தது மனநலம் குன்றிய நபர் என அறியப்பட்டதையடுத்து மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் அந்தக் கொடி அந்தப் பகுதியிலிருந்து அகற்றப்பட்டது.

யாழ்ப்பாணம் நகரில் வழமையாக உலாவும் மனநலம் குன்றிய ஒருவர் இன்று அதிகாலை வேளையில் அந்தப் பகுதியில் உள்ள கற்களை சேர்த்து குவித்து கொடியினை அதிலே கட்டுவதை தாங்கள் கண்டதாக வர்த்தகர் சிலர் தெரிவித்தனர்.

யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக வீதியின் நடுவே கற்கள் மற்றும் இரும்பு குழாய்கள் கொண்டு வந்து போடப்பட்டு அதன் மீது பௌத்த கொடி ஒன்று கட்டப்பட்டு மலர் சூட்டப்பட்டிருந்தது. அதனால் சர்ச்சை எழுந்தமை குறிப்பிடத்தக்கது.