ரஞ்சன் எம்.பியின் உறுப்புரிமையை இடைநிறுத்தியது ஐதேக

0

முன்னாள் இராஜாங்க அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் ராமநாயக்கவின் உறுப்புரிமையை இடைநிறுத்தியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

ஐக்கிய தேசிய முன்னணியின் ஆட்சிக் காலத்தில் பொலிஸ், குற்ற விசாரணைப் பிரிவு மற்றும் நீதித்துறை ஆகியவற்றில் தலையீடு செய்தார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மீது தற்போதைய அரசால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

தலையீடுகள் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள், நீதிபதியுடன் அவர் தொலைபேசியில் உரையாடிய ஒலிப்பதிவுகள் அவரது வீட்டிலிருந்து மீட்கப்பட்டன. அந்த ஒலிப்பதிவுகள் தொடர்பில் குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் உறுப்புரிமையை ஐக்கிய தேசியக் கட்சி இடைநிறுத்தியுள்ளதாக அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் அறிவித்துள்ளார்.