ரஞ்சன் ராமநாயக்கவைக் கைது செய்ய சிஐடிக்கு சட்ட மா அதிபர் பணிப்பு

0

முன்னாள் இராஜாங்க அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் ராமநாயக்கவை கைது செய்யுமாறு கொழும்பு குற்ற குற்றத்தடுப்புப் பிரிவுக்கு சட்ட மா அதிபர் பணித்துள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியின் ஆட்சிக் காலத்தில் பொலிஸ், குற்ற விசாரணைப் பிரிவு மற்றும் நீதித்துறை ஆகியவற்றில் தலையீடு செய்தார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மீது தற்போதைய அரசால் குற்றஞ்சாட்டப்பட்டது.

தலையீடுகள் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள், நீதிபதியுடன் அவர் தொலைபேசியில் உரையாடிய ஒலிப்பதிவுகள் அவரது வீட்டிலிருந்து மீட்கப்பட்டன. அந்த ஒலிப்பதிவுகள் தொடர்பில் குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அந்த விசாரணைகளின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவைக் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு சட்ட மா அதிபர் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவுக்கு இன்று மாலை அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here