ரஞ்சன் ராமநாயக்க எம்.பி. கைது

0

முன்னாள் இராஜாங்க அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் ராமநாயக்க கொழும்பு குற்றத் தடுப்புப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நுகேகொட நீதிமன்றின் பிடியாணை உத்தரவுக்கு அமைய இன்று மாலை 6 மணியளவில் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்துக்கு கைது செய்யப்பட்டார் பொலிஸார் தெரிவித்தனர்.

வழக்கு விசாரணை தொடர்பில் நீதிபதியுடன் தொலைபேசியில் உரையாடியதன் மூலம் நீதித்துறையில் தலையீடு செய்தார் என்ற குற்றச்சாட்டின் கீழேயே நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை கைது செய்து நீதிமன்ற நடவடிக்கைக்கு உள்படுத்துமாறு கொழும்பு குற்றத் தடுப்புப் பொலிஸாருக்கு சட்ட மா அதிபர் இன்று பிற்பகல் பணிப்புரை வழங்கியிருந்தார்.

அதனடிப்படையில் நுகேகொட நீதிவான் நீதிமன்றில் பிடியாணை உத்தரவைப்பெற்று நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க அவரது நாடாளுமன்ற உறுப்பினருக்கான இல்லத்தில் வைத்து கொழும்பு குற்றத் தடுப்புப் பொலிஸார் இன்று மாலை கைது செய்தனர்.