மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதியாக அப்துல்லாஹ் பதவியேற்பு

0

மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதியாக அல்ஹாபில் என். எம். மொகமெட் அப்துல்லாஹ் இன்று கடமைகளைப் பொறுப்பேற்றார்.

மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதியாகக் கடமையாற்றிய அல்ஹாபில் என். எம். மொகமெட் அப்துல்லாஹ், மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றப்பட்டார்.

மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.வை.எம். இஸர்தீன், கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றப்பட்டார்.

இந்த நிலையில் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதியாக இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றார் மேல் நீதிமன்ற நீதிபதி அல்ஹாபில் என். எம். மொகமெட் அப்துல்லாஹ்.

அவருக்கு மட்டக்களப்பு நீதிபதிகள், நீதிமன்ற உத்தியோகத்தர்கள் வரவேற்பளித்தனர்.