வடமாகாண நிலமைகளை ஆராய யாழ்.வருகிறார் கோத்தாபய

0

வடக்கு மாகாண நிலமைகள் தொடர்பில் ஆராயும் கூட்டம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் இந்த மாத இறுதியில் யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.

யாழ்ப்பாணம் கலாசார மண்டபத்தை திறந்து வைப்பதற்காக ஜனாதிபதி இந்த மாத இறுதியில் யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளநிலையில் இந்த கூட்டம் ஒழுங்கு செய்யப்படவுள்ளதாக அறிய முடிகிறது.

வடக்கு மாகாணத்தில் கடந்த அரசால் தேர்தல் காலத்தில் முன்மொழியப்பட்டு நிதிப் பற்றாக்குறை காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் இந்தக் கூட்டத்தின் போது ஆராயப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

மேலும் வடக்கு மாகாணத்தில் அவசரமாக முன்னெடுக்கப்படவேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண ஆளுநர், மாவட்டச் செயலாளர்களால் ஜனாதிபதியிடம் இதன்போது முன்மொழியப்படும் என்று அறிய முடிகிறது.