சாவகச்சேரியில் தமிழர் மரபுவழி உழவர் திருவிழாவும் பட்டிப் பொங்கல் நிகழ்வு

0

தமிழர் மரபுவழி உழவர் திருவிழாவும் பட்டிப் பொங்கல் நிகழ்வு சாவகச்சேரியில் இன்று பிற்பகல் இடம்பெற்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

சங்கத்தானை முருகன் ஆலய முன்றலில் இருந்து விருந்தினர் சகிதம் மாட்டுவண்டி மற்றும் இசை வாத்தியங்களுடன் நடைபவனி ஆரம்பமாகி சாவகச்சேரி மத்திய பேருந்து நிலையத்தை சென்றடைந்தது.

அங்கு உழவர் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

சாவகச்சேரி மத்திய பேருந்து நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கோமாதா பூஜை, மங்கல இசை, பொங்கல், கௌரவிப்பு நிகழ்வு ,நடன நிகழ்ச்சிகள்,கவியரங்கம் மற்றும் இன்னிசை கச்சேரி ஆகியன இடம்பெற்றன.

வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கேசவன் சயந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா கலந்துகொண்டார்.

சிறப்பு விருந்தினர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈஸ்வரபாதம் சரவணபவன், எம்.ஏ. சுமந்திரன் வடக்கு மாகாண அவைத் தலைவர் சிவஞானம் ஆகியோர் கலந்து கொண்டனர்.