நோயாளர்களை முட்டாளாக்கும் யாழ்ப்பாணம் தனியார் வைத்தியசாலை

0

யாழ்ப்ப்பாணம் நொர்தேன் வைத்தியசாலை நிர்வாகம் தொடர்ந்தும் சில மருத்துவ அதிகாரிகளின் உதவியுடன் நோயாளர்களை முட்டாளாக்கும் செயற்பாட்டுகளில் ஈடுபட்டு வருகின்றது.
அவர்களிடம் இருக்கும் தரம் கெட்ட எம்.ஆ.ஐ ஸ்கான் சம்மந்தமான செய்தி சில வருடங்களுக்கு முன் ஊடகங்களில் வெளிவந்தது. இதனை தொடர்ந்து அனைத்து கதிரியக்க மருத்துவர்களும் அதனை பாவிப்பதினை தவிர்த்துக் கொண்டனர்.
இந்த நிலையில் கதிரியக்க பெண் மருத்துவ நிபுணர் ஒருவர் மாத்திரம் இதனை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார். இவர் மந்திகையில் கடமை நேரத்தில் தனியார் வைத்தியசாலையில் கடமையில் ஈடுபட்டதற்காக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர் ஆவார்.

இந்த தரமற்ற ஸ்கானை எடுப்பதற்க்கு கட்டளை இடும் மருத்துவர்களுக்கு வைத்தியசாலை ஆயிரம் ரூபாவினை கொமிசனாக கொடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த முறையற்ற செயற்பாட்டிற்க்கு தெரிந்தும் தெரியாத மாதிரி யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதர திணைக்களமும் அனுமதி வழங்கியுள்ளது .

இந்த தொடர் முறையற்ற செயற்பாடு தொடர்பாக பல இடங்களிலும் சில கடமை உணர்ச்சி மிக்க மருத்துவர்கள் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கபடாததால் தற்போது ஜானதிபதியிடம் இது தொடர்பாக ஆதாரத்துடன் தவல்கள் தெரிவிக்கபட இருப்பதாக தெரிகிறது.

கீழே படத்தில் இருப்பது மருத்துவர் ஒருவரின் முகநூலில் பெறப்பட மேற்படி தனியார் வைத்தியசாலையில் பெறபட்ட தரமற்ற எம்.ர்.ஐ ஸ்கேன் படம்.

இனி கொழும்பில் உள்ள வைத்தியசாலையில் எடுக்கப்பட்ட அதே மாதிரியான ஸ்கேனின் படத்தினை கீழே பார்க்கலாம்.

சாதரண மக்களுக்கே இது எவ்வளவு தரமற்ற, தெளிவில்லாது என்று இலகுவாக புரியும். எனவே மக்கள் இது தொடர்பாக அவதானமாக இருக்க வேண்டப்படுகின்றனர்.

ஆசிரியர்,
முதல்வனின் மக்கள் முகம்  பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்ட இந்தத் தகவல் ஆராய்ந்த பின்னர் வெளியிடப்பட்டது.