யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை மீளவும் ஏறுமுகம்

0

யாழ்ப்பாணத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பவுணுக்கு 200 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

தை பிறந்தாலும் பிறந்தது… தங்கம் விலை ஒரே அடியாக உயர்ந்து கொண்டே செல்கிறதே என்ற கவலையில் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்வுகள் நெருங்கும் நிலையில் தங்கம் விலையேற்றம் கண்டுள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை!

யாழ்ப்பாணத்தில் இன்று (ஜனவரி 20) ஒரு பவுண் ஆபரணத் தங்கம் (22 கேரட்) 200 ரூபாய் உயர்த்தப்பட்டு 70 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றுமுன்தினம் இதன் விலை 70 ஆயிரத்து 600 ரூபாயாக இருந்தது.

தூய தங்கத்தின் விலை!

24 கேரட் தூய தங்கத்தின் விலை பவுணுக்கு 200 ரூபாய் உயர்ந்துள்ளது. இன்று அதன் விலை பவுணுக்கு 77 ஆயிரத்து 200 ரூபாயாக உயர்ந்துள்ளது. நேற்றுமுன்தினம் 77 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.