சாரதிப் பத்திர மருத்துவச் சான்றிதழுக்கான திகதியை இணையத்தில் பெற்றுக்கொள்ள வசதி

0

மருத்துவச் சான்றிதழை பெற்றுக்கொள்ளும் போது அதற்கு தேவையான நாளை தெரிவுசெய்வதற்கு இணையம் (Online) மூலம் விண்ணப்பிக்கக்கூடிய வசதி செய்யப்பட்டுள்ளது.

வரும் திங்கட்கிழமை தொடக்கம் இந்த சேவையை http://ntmi.lk/index.php?option=com_content&view=featured&Itemid=101&lang=ta இணையத்தள முகவரி ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இணையத்தளத்தில் உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த வசதியை அறிமுகப்படுத்தும் நிகழ்வு நேற்று செத்சிரிபாய போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சில் போக்குவரத்து சேவை முகாமைத்துவ மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மகிந்த அமரவீர தலைமையில் இடம்பெற்றது.

பரீட்சார்த்தமாக முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த வசதி எதிர்வரும் வெள்ளிக்கிழை வரை இடம்பெறும் அதனைத் தொடர்ந்து எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பொது மக்களால் இதனை பயன்படுத்த முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here