யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் இன்றைய விலை

0

யாழ்ப்பாணத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பவுணுக்கு 300 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் உண்டாகிறது. கடந்த சில நாள்களில் கணிசமாகக் குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ஏறுமுகம் கொண்டிருக்கிறது.

ஆபரணத் தங்கத்தின் விலை!

யாழ்ப்பாணத்தில் இன்று (ஜனவரி 24) ஒரு பவுண் ஆபரணத் தங்கம் (22 கேரட்) 300 ரூபாய் உயர்த்தப்பட்டு 70 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று இதன் விலை  70 ஆயிரத்து 500 ரூபாயாக  இருந்தது.

தூய தங்கத்தின் விலை!

24 கேரட் தூய தங்கத்தின் விலை  பவுணுக்கு 300 ரூபாய் உயர்ந்துள்ளது. இன்று அதன் விலை பவுணுக்கு 77 ஆயிரத்து 200 ரூபாயாக உயர்ந்துள்ளது. நேற்று 76 ஆயிரத்து 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.