உயிர்க்கொல்லி கோரோனா வைரஸ் இலங்கையில்- தொற்றுக்குள்ளான இரு பெண்கள் வைத்தியசாலையில்

0

“சீனாவை தாக்கி அங்கு மக்களை உயிரெடுத்து  வரும் கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியதாக சந்தேகிக்கப்படும் சீன பெண் ஒருவர் உள்பட பெண்கள் இருவர் தொற்று நோய்கள் வைத்தியசாலையில் (ஐடிஎச்) சேர்க்கப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் பெறப்பட்ட மாதிரிகள் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது உலகம் முழுவதும் கோரோனா வைரஸ் என்ற சுவாசத் தொற்று நோய் ஏற்பட்டுள்ளது. இந்தக் காய்ச்சல் சீனாவில் பரவுகின்றது.

சீனாவில் இந்த வைரஸ் காரணமாக ஓர் மாகாணத்தைச் சேர்ந்த மக்களை வேறு மாகாணங்களுக்குச் செல்லாதவாறு கட்டுப்பாடுகளைப் போட்டுள்ளனர்.

பாம்புக் காய்ச்சல் என இந்த தொற்றுக்குள்ளானதாக நம்பப்படும் இருவர் ஐடிஎச் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் . அவர்களுக்கு ஏற்பட்டுள்ள தொற்றுத் தொடர்பில் சுகாதார அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.