யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்

0

யாழ்ப்பாணத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பவுணுக்கு 150 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் உண்டாகிறது. கடந்த வாரம் கணிசமாகக் குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த மூன்று நாள்களில் மீண்டும் ஏறுமுகம் கொண்டிருக்கிறது.

ஆபரணத் தங்கத்தின் விலை!

யாழ்ப்பாணத்தில் இன்று (ஜனவரி 25) ஒரு பவுண் ஆபரணத் தங்கம் (22 கேரட்) 150 ரூபாய் உயர்த்தப்பட்டு 70 ஆயிரத்து 950 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று இதன் விலை  70 ஆயிரத்து 800 ரூபாயாக  இருந்தது.

தூய தங்கத்தின் விலை!

24 கேரட் தூய தங்கத்தின் விலை  பவுணுக்கு 200 ரூபாய் உயர்ந்துள்ளது. இன்று அதன் விலை பவுணுக்கு 77 ஆயிரத்து 400 ரூபாயாக உயர்ந்துள்ளது. நேற்று 77 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here