இலங்கையில் நால்வரின் மாதிரிகள் பரிசோதனையில் கோரோனா வைரஸ் தொற்றில்லை- மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம்

0

சந்தேகத்திற்கிடமான அறிகுறிகளுக்காக பரிசோதிக்கப்பட்ட நான்கு பேர் கோரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லை என்பதை சோதனைகள் உறுதிப்படுத்துகின்றன என்று மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் தொற்று நோயில் நிறுவன வைத்தியசாலையில் (ஐடிஎச்) சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்கு பேராக அதிகரித்துள்ளது.

அவர்கள் நால்வரிடம் பெறப்பட்ட மாதிரிகள் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன.

நால்வரில் ஒருவர் வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பியுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது உலகம் முழுவதும்  கோரோனா வைரஸ் என்ற சுவாசத் தொற்று நோய் ஏற்பட்டுள்ளது. இந்தக் காய்ச்சல் சீனாவில் பரவுகின்றது.

சீனாவில் இந்த வைரஸ் காரணமாக ஓர் மாகாணத்தைச் சேர்ந்த மக்களை வேறு மாகாணங்களுக்குச் செல்லாதவாறு கட்டுப்பாடுகளைப் போட்டுள்ளனர்.