பிரபல கூடைப்பந்து வீரர் கோபி ப்ரையண்ட் ஹெலி விபத்தில் சாவு: 13 வயது மகளும் உயிரிழந்தார்

0

உலங்குவானூர்தி விபத்தில் சிக்கி பிரபல கூடைப்பந்து வீரர் கோபி ப்ரையண்ட் உயிரிழந்தார்.

அமெரிக்காவின் தேசிய கூடைப்பந்து கூட்டமைப்பின் முக்கிய வீரர் கோபி ப்ரையண்ட். கூடைப்பந்து விளையாட்டில் 20 ஆண்டுகளாக மாபெரும் ஆளுமையாக திகழ்ந்தவர். ஒலிம்பிக் போட்டிகளில் இரண்டு முறை தங்கப்பதக்கம் வென்றவர்.

இன்று அதிகாலை கோபி ப்ரையண்ட் தனது 13 வயது மகள் ஜியானா உள்பட 8 பேருடன் தனியார் உலங்குவானூர்தி ஒன்றில் தவுசண்ட் ஆக்ஸ் என்னும் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார்.

கடும் பனி மூட்டத்தின் நடுவே கலாபஸாஸ் என்னும் இடத்தில் உள்ள மலைப்பகுதியின் சென்றுகொண்டிருக்கும்போது உலங்குவானூர்தி திடீரென தீப்பிடித்துக் கொண்டது.

இதில் கோபி ப்ரையண்ட், அவரது 13 வயது மகள் ஜியானா, கூடைப்பந்து பயிற்சியாளர் கிரிஸ்டினா மாஸர் உள்ளிட்ட 9 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர்.

இதுகுறித்து லாஸ் ஏஞ்சல்ஸ் ஷெரிஃப் உலங்குவானூர்தியில் இருந்த 9 பேரும் இறந்துவிட்டனர் என்பதை உறுதி செய்துள்ளார்.

கோபி ப்ரையண்ட்டுக்கு வானெஸா என்ற மனைவியும் ஜியானா உள்பட 4 மகள்களும் உள்ளனர்.

கோபி ப்ரையண்ட்டின் திடீர் உயிரிழப்பு உலக கூடைப்பந்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரது உயிரிழப்புக்கு ஒபாமா, டொனால்டு ட்ரம்ப் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here