இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN 1155

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இம்முறை புதிய நடைமுறை

0

யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இம்முறை புதிய முறைப்படி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

ஒவ்வொரு திணைக்களங்கள், துறைகள் வாரியாக இம்முறை யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் வரும் 31ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
இதற்கான ஒழுங்கமைப்பை யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் மு்ன்னெடுத்துள்ளார்.

இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN1156

கூட்டத்தில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தால் முன்னெடுக்கப்படும் திட்டங்களின் மீளாய்வு, முன்மொழிவுகள் ஆராயப்பட்டு, பிரதேச செயலர்கள், உள்ளூராட்சி சபைகளின் முன்மொழிவுகள் – பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்படவுள்ளன.

தொடர்ந்து விவசாயம், கல்வி, குடிதண்ணீர் – பாதை உள்ளிட்ட உள்ளிட்ட உள்கட்டுமானங்கள், சுகாதாரம் என துறை ரீதியான பிரச்சினைகள் ஆராயப்படவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஆராயப்படவேண்டிய விடயங்கள் தொடர்பில் பொதுமக்கள் தமது முன்மொழிவுகளை நாளை புதன்கிழமை யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதனிடம் நேரில் சமர்ப்பிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரின் அலுவலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் நாளை புதன்கிழமை பொதுமக்கள் சந்திப்பை நடத்துகின்றார்.

இதன்போதே பொது மக்கள், பொது அமைப்புக்கள் தமது பிரச்சினைகள் தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரிடம் நேரில் முன்மொழிவுகளை வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN236

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here