சீனாவில் கோரோனா வைரஸால் உயிரிழந்தோர் 425ஆக உயர்வு

0

உலகை அச்சுறுத்தி வரும் கோரோனா வைரஸுக்கு சீனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 425 ஆக அதிகரித்துள்ளது. சீனா முழுவதும் கோரோனா வைரஸுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 ஆயிரத்து 400ஐயும் கடந்துள்ளது.

இந்நிலையில் நேற்று மட்டும் 64 பேர் கோரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்ததாக ஹூபே மாகாணத்திலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளன. ஹூபேயில் கோரோனாவுக்கு புதிதாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் 2 ஆயிரத்து 345 பேர் கூடுதலாக இணைந்துள்ளனர்.

ஹூபே மாகாண தலைநகர் வூஹானில் ஒரு சந்தையில் வனவிலங்குகள் இறைச்சி விற்கப்பட்டது. இந்தச் சந்தையிலிருந்து கடந்த டிசெம்பரில் இந்த வைரஸ் பரவி தற்போது உலகம் முழுதும் பரவி வருகிறது.

இப்போது சுமார் 20 நாடுகளுக்கும் மேலாக இந்த கோரோனா வைரஸ் தொற்றில் சிக்கித் தவித்து வருகிறது.

சீனாவுக்கு வெளியே கோரோனா வைரஸினால் ஒருவர் உயிரிழந்த நாடு பிலிப்பைன்ஸ் ஆகும்.

தாய்லாந்தில் இதற்கு ஃப்ளூ வைரஸுக்கு எதிரான மருந்து மற்றும் எச்.ஐ.வி. மருந்துகளைக் கலந்து கொடுத்ததில் 48 மணி நேரங்களில் முன்னேற்றம் தெரிவதாகத் தெரிவித்துள்ளனர்.

இதுவரை சீனாவுக்கு வெளியே கோரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை விவரம் வருமாறு:

ஆஸ்திரேலியா: 12

கம்போடியா: 1

ஹொங்கொங்: 15

இந்தியா: 3

ஜப்பான்: 20

மக்காவ்: 8

மலேசியா: 8

நேபாளம்: 1

பிலிப்பைன்ஸ்: 2 (இறந்த சீன நபர் உள்பட)

சிங்கப்பூர்: 18

தென் கொரியா: 15

இலங்கை: 1

தாய்வான்: 10

தாய்லாந்து: 19

வியட்நாம்: 8

வட அமெரிக்கா பகுதி:

கனடா : 4

யுஎஸ்: 11

ஐரோப்பா:

பிரிட்டன்: 2

பின்லாந்து: 1

பிரான்ஸ்: 6

ஜேர்மனி: 12

இத்தாலி: 2

ரஷ்யா: 2

ஸ்பெயின்: 1

சுவீடன்: 1

மத்திய கிழக்கு:

ஐக்கிய அரபு அமீரகம்: 50