யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை வீழ்ச்சி

0

யாழ்ப்பாணத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பெப்.5) புதன்கிழமை பவுணுக்கு 850 ரூபாயால் வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த இரண்டு தினங்களாகவே சர்வதேச சந்தையிலும் தங்கத்தின் விலையானது வீழ்ச்சி கண்டு வருகிறது. அவுன்ஸூக்கு நேற்று ஆயிரத்து 594.50 டொலராக அதிகபட்சமாக சென்ற நிலையில், இன்று குறைந்தபட்சம் ஆயிரத்து 574.80 டொலராகவும் குறைந்துள்ளது. எனினும் தற்போது இது 1575.95 டொலர்களாக வர்த்தகமாகி வருகிறது.

இதனால் இலங்கையிலும் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் இன்று (பெப். 5) திங்கட்கிழமை 22 கரட் ஆபரணத் தங்கத்தின் விலை  70 ஆயிரத்து 300 ரூபாய்க்கு விற்பனையாகிறது. நேற்றுமுன்தினம் ஒரு பவுண் ஆபரணத் தங்கம் 71 ஆயிரத்து 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

தூய தங்கத்தின் விலை!

24 கரட் தூய தங்கத்தின் விலை பவுண் ஒன்று 76 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை 24 கரட் தூய தங்கத்தின் விலை பவுண் ஒன்று 77 ஆயிரத்து 600 ரூபாயாகக் காணப்பட்டது.