விண்ணைப் பிளந்தது தமிழ் மந்திரம்… குடமுழுக்கு கண்ட தஞ்சைப் பெருவுடையார் கோவில்!

0

மன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட 1,000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான தஞ்சைப் பெரிய கோயிலின் குடமுழுக்கு விழா, 23 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (பெப்.5) நடைபெற்றது.

குடமுழுக்கை முன்னிட்டு, கோயில் முழுவதும் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. கடந்த முதலாம் திகதி ஒன்றாம் கால பூஜை தொடங்கி, நேற்றுடன் (பிப்.4) ஏழாவது கால பூஜை நிறைவடைந்தது.

இந்நிலையில், இன்று அதிகாலை 4.30 மணிக்கு எட்டாவது கால பூஜை தொடங்கியது. இந்த எட்டாவது கால பூஜை தமிழில் நடைபெற்றது. 100-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் இந்த எட்டாவது கால பூஜையை நடத்தினர்.

இதையடுத்து, காலை 9.30 மணிக்கு பெரிய கோயிலின் குடமுழுக்கு விழா தொடங்கியது. காவிரி மற்றும் அதனுடன் இணையும் கொள்ளிடம் உள்ளிட்ட ஆறுகளில் இருந்து பெறப்பட்டு பூஜைகள் செய்யப்பட்ட புனித நீர், கோயில் கலசத்தில் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது.

மேலும், கோயிலின் கொடிமரத்திலும் விமானங்கள் அனைத்திலும் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. அவற்றுக்குத் தீபாராதனையும் நடைபெர்றது.

அப்போது, கோயிலில் குழுமியிருந்த ஏராளமான பக்தர்கள் ‘ஓம் நமச்சிவாய’ என முழக்கமிட்டனர். குடமுழுக்கு நடைபெற்றபோது அனைத்து அறிவிப்புகளும் தமிழிலேயே நடைபெற்றன.

குடமுழுக்கு விழாவைக் காண தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்துள்ளனர். மேலும், கனடா, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளைச் சேர்ந்த பக்தர்களும் குடமுழுக்கைக் நேரில் தரிசித்தனர்.

பெரிய கோயில் குடமுழுக்கின்போது வட்டமிட்ட கருடன்: பக்தர்கள் பரவசம்
By செய்திப்பிரிவு
Published: 05 Feb, 20 10:56 amModified: 05 Feb, 20 10:56 am
  

பெரிய கோயில் குடமுழுக்கின் போது கருடன் பறந்ததால் பக்தர்கள் பரவசத்தில் ஆழ்ந்தனர்.

தஞ்சைப் பெரிய கோயிலில் இன்று (பிப்.5) குடமுழுக்கை முன்னிட்டு, கோயில் முழுவதும் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. கடந்த 1-ம் தேதி ஒன்றாம் கால பூஜை தொடங்கி, நேற்றுடன் ஏழாவது கால பூஜை நிறைவடைந்தது. இந்நிலையில், இன்று காலை எட்டாவது கால பூஜை நடைபெற்றது.

இதையடுத்து, காலை 9.30 மணிக்கு பெரிய கோயிலின் குடமுழுக்கு விழா தொடங்கியது. காவிரி மற்றும் அதனுடன் இணையும் கொள்ளிடம் உள்ளிட்ட ஆறுகளில் இருந்து பெறப்பட்டு பூஜைகள் செய்யப்பட்ட புனித நீர், கோயில் கலசத்தில் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. மேலும், கோயிலின் கொடிமரத்திலும் விமானங்கள் அனைத்திலும் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. அவற்றுக்குத் தீபாராதனையும் நடைபெற்றது.

இதனிடையே, குடமுழுக்கு நடைபெற்றபோது, கலசத்தின் மேலே கருடன் வட்டமிட்டது பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. அப்போது, ‘கருட பகவான் வந்துவிட்டான்’ என ஒலிப்பெருக்கியில் அறிவித்தனர். இதையடுத்து, அங்கு குழுமியிருந்த பக்தர்கள், கருட பகவானை வான் நோக்கி வழிபட்டனர்.