விக்னேஸ்வரன் தலைமையில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி உருவாக்கம்- 4 கட்சிகள் இணைவு

0

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தலைமையில் நான்கு கட்சிகளின் கூட்டாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி (Tamizh Makkal Thesiya Kootani) உதயமாகியுள்ளது.

இந்த புதிய கூட்டணியில் அங்கம் 4 கட்சிகளின் தலைவர்களும் இன்று புரிந்துணர்வு உடன்பாட்டில் கைச்சாத்திட்டனர்.

இந்த கைச்சாத்திடும் நிகழ்வு யாழ்ப்பாணம் நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று முற்பகல் இடம்பெற்றது.

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனை பொதுச் செயலாளராகக் கொண்ட தமிழ் மக்கள் கூட்டணி, சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈழமக்கள் புரட்சிகர முன்னணி (ஈபிஆர்எல்எப்), முன்னாள் மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தலைமையிலான ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் மற்றும் மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா தலைமையிலான தமிழ் தேசிய கட்சி ஆகியன இணைந்த தேர்தல் கூட்டாகவே தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஈபிஆர்எல்எப் கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து கடந்த பொதுத் தேர்தலுடன் விலகியிருந்தது. அத்துடன் ஏனைய 3 கட்சிகளும் தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து வந்தவர்களால் ஆரம்பிக்கப்பட்டவையாகும்.

“பதவிக்காக நாம் வரவில்லை. மக்களுக்கு சேவையாற்றவே இந்தக் கூட்டணியை உருவாக்கியுள்ளோம்” என்று கூட்டணியின் உடன்பாடு கைச்சாத்திடும் நி்கழ்வை ஆரம்பித்து வைத்து நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here