வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு திடீரெனச் சென்ற ஜனாதிபதி -தமிழ் அரசியல் கைதிகளையும் பார்வையிட்டார்

0

கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றிருந்த ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளையும் பார்வையிட்டார்.


ஜனாதிபதியுடன் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவும் சென்றிருந்தார்.

கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு இன்று மாலை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச முன் அறிவித்தலின்றி கண்காணிப்புக்காகச் சென்றிருந்தார். அங்குள்ள நிலமைகளை ஜனாதிபதி ஆராய்ந்து வருகிறார்.

அங்கு தண்டனை பெற்ற மற்றும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை அவர் நடந்து செல்லும் பார்வையிட்டார். சிறைச்சாலை அதிகாரிகள் அவருக்கு அடையாளம் காண்பித்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.

தண்டனை பெற்றுள்ள தமது தந்தையை பொதுமன்னிப்பில் விடுவிக்கக் கோரி பிள்ளைகள் இருவர் காத்திருக்கும் அரசியல் கைதி ஆனந்தசுதாகரனையும் பார்வையிட்டார்.ஆனால் தனிப்படச் சந்திக்கவில்லை என்று தெரவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here