யாழ். குடாநாட்டுக்கான நீர் விநியோகத்திட்டம்; அடுத்த வாரம் முக்கிய கூட்டம் – மும்மொழியப்படும் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்ய அமைச்சர் உறுதி

0

யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கான குடிதண்ணீர் விநியோகத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்களை ஆராய்ந்து நான்கு வளங்களின் முதலில் நடைமுறைப்படுத்தக் கூடிய திட்டத்தை முன்மொழிவு செய்வதற்கு என முக்கிய கூட்டம் வரும் 24ஆம் திகதி கொழும்பில் இடம்பெறுகிறது.

இந்தக் கூட்டத்தில் குடாநாட்டுக்கான குடிதண்ணீர் விநியோகத்தத் திட்டத்துக்கு முன்மொழியப்பட்டுள்ள 4 திட்டங்களில் முன்னுரிமை அடிப்படையிலும் உடனடியாக ஆரம்பிக்கக் கூடியதுமான திட்டத்தை தெரிவு செய்யுமிடத்துக்கு அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்வதாக நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ச உறுதியளித்துள்ளார்.

யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கான குடிதண்ணீர் விநியோகத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ச தலைமையில் கடந்த வாரம் இடம்பெற்ற கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

நீர்ப்பாசனத் திணைக்களம், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் உள்ளிட்டவற்றின் அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.

விவசாயம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ச தலைமையில் சமல் ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் யாழ்ப்பாணம் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன், மன்னார் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கே. காதர் மஸ்தான், வடக்கு மாகாண ஆளுநர் பி.எம்.எஸ். சார்ள்ஸ் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களம், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அதிகாரிகளும் பங்கேற்றனர்.

இதன்போது யாழப்பாணக் குடாநாட்டுக்கான குடிதண்ணீர் விநியோகத் திட்டத்தை முன்னெடுக்க இரணைமடு நீர் விநியோகத் திட்டம், கடல் நீரை குடிதண்ணீராக மாற்றும் திட்டம், பாலி ஆறு திட்டம் மற்றும் வடமராட்சி களப்புத் திட்டம் என்பன முன்மொழியப்பட்டுள்ளன என்று சுட்டிக்காட்டப்பட்டது.

இரணைமடு திட்டத்துக்கு 9 ஆயிரத்து 470 மில்லியன் ரூபாயும் கடல் நீரை குடிதண்ணீராக மாற்றும் திட்டம் 8 ஆயிரத்து 153 மில்லியன் ரூபாயும் பாலி ஆறு திட்டத்துக்கு 10 ஆயிரத்து 345 மில்லியன் ரூபாயும் வடமராட்சி களப்பு நீர் விநியோகத் திட்டத்துக்கு 21 ஆயிரத்து 160 மில்லியன் ரூபாயும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகளால் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்த நிலையிலேயே குடாநாட்டுக்கான குடிதண்ணீர் விநியோகத்தத் திட்டத்துக்கு முன்மொழியப்பட்டுள்ள 4 திட்டங்களில் முன்னுரிமை அடிப்படையிலும் உடனடியாக ஆரம்பிக்கக் கூடியதுமான திட்டத்தை தெரிவு செய்யுமிடத்துக்கு அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்வதாக நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ச உறுதியளித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையில் மழை நீரை சேகரித்து மேற்கொள்ளப்படும் பெரியளவிலான குடிதண்ணீர் வழங்கல் திட்டத்தின் நிர்மாணப் பணிகள் வடமராட்சி களப்பு பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் 2019ஆம் ஆண்டு ஓகஸ்ட் 30ஆம் திகதி ஆரம்பித்துவைக்கப்பட்டது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் 2019ஆம் ஆண்டு ஓகஸ்ட் 30ஆம் திகதி ஆரம்பித்துவைக்கப்பட்ட திட்டம்இதேவேளை, இலங்கையில் மழை நீரை சேகரித்து மேற்கொள்ளப்படும் பெரியளவிலான குடிதண்ணீர் வழங்கல் திட்டத்தின் நிர்மாணப் பணிகள் வடமராட்சி களப்பு பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் 2019ஆம் ஆண்டு ஓகஸ்ட் 30ஆம் திகதி ஆரம்பித்துவைக்கப்பட்டது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் 2019ஆம் ஆண்டு ஓகஸ்ட் 30ஆம் திகதி ஆரம்பித்துவைக்கப்பட்ட திட்டம்

நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் இந்த வேலைத்திட்டத்தினை இரண்டு வருடங்களில் நிறைவு செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது என அப்போது தெரிவிக்கப்பட்டது. எனினும் இந்த நீர் விநியோகத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படாமலேயே ஆரம்பித்து வைக்கப்பட்டதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எம்.எஸ். சார்ள்ஸ் இன்று ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here