பருத்தித்துறை துறைமுக அபிவிருத்தியின் சுற்றாடல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை; பொதுமக்களின் கருத்துக்களை பெறும் பணி ஆரம்பம்

0

பருத்தித்துறை துறைமுக அபிவிருத்தியினால் சுற்றாடலுக்கு ஏற்படும் தாக்க அறிக்கை தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை மதிப்பீடு செய்யும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பி.கே. பிரபாத் சந்திரகீர்த்தி அறிவித்துள்ளார்.

இலங்கை துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட பருத்தித்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் செயற்றிட்டத்துக்கு சுற்றாடல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை பொதுமக்களின் பரிசீலனைக்காக கீழ் காணும் இடங்களில் நாள்முழுவதும் காலை 8.30 மணி முதல் பிற்பகல் 4.15 மணிவரை 2020.02.10ஆம் திகதி தொடக்கம் 30 நாள்கள் வைக்கப்படிருக்கும் ( வார இறுதி நாள்கள் தவிர்ந்த).

கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவத் திணைக்களம் – புதிய செயலகம், 4ஆவது மாடி, மாளிகாவத்தை, கொழும்பு -10.

நகர சபை – பருத்தித்துறை.

மாவட்ட செயலாளர் அலுவலகம் – யாழ்ப்பாணம்.

பிரதேச செயலாளர் அலுவலகம் – வடமராட்சி வடக்கு.

கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களம் – மாவட்ட அலுவலகம், யாழ்ப்பாணம்.

மத்திய சுற்றாடல் அதிகார சபை – இல.104, பரிசர பியச, டென்சில் கொப்பேக்கடுவ மாவத்தை, பத்திரமுல்லை.

இந்த உத்தேச கடற்தொழில் துறைமுக அபிவிருத்திச் செயற்திட்டத்தினால் சுற்றாடலுக்கு ஏற்படும் தாக்கம் தொடர்பான அறிக்கை சம்பந்தமாக பொதுமக்களின் கருத்துக்களை 2020.02.10ஆம் திகதி தொடக்கம் 30 நாள்களுக்கு கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்துக்கு எழுத்துமூலமாக சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.